வியர்வை முத்துக்கள்-------நிஷா

உழைக்க மறுத்த
நம் உடல்களுக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?
உடற்பயிற்சி மறுத்து
ஊனமான நமக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?
விரல் நுனியில் கணினியோடு
வாழ்க்கையான நமக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?
குளு குளு அறையிலே
கொஞ்சிடும் நமக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?
நடப்பதற்கு காலிருந்தும்
நம்பிக்கையே வாகனமாகிப்போன
நமக்கு
எப்படித் தெரியும்
வியர்வை முத்துக்கள்
எவ்வளவு
விலை மதிப்பானவை
என்று?