===என்னவன்===

அழகான அவதிகள் தருமிவன்
அந்தபுரத்துச் சீமானோ ?
இதமான இமசைகள் தரும்
இந்திரலோக இளவரசனோ ?

இனியன் வாழ்வின் எச்சம்தான்
இலக்கண இலக்கியமோ ?
இவன் வலிமையின் மிச்சம்தான்
இரும்பாய் இம்மண்ணிலோ ?

கள்வனின் கடைக்கண் பார்வை
காந்தத்தின் ஈர்ப்புவிசையோ ?
காதலனின் வெளிசுவாசம்
காற்றிற்கு புதுவாசமோ ?

சொரூபனின் விழிமோதல்
சூரியனுக்கு விமோச்சனமோ?
அரூபனின் அழகு நுதல்
அந்நிலவின் வளர்பிறையோ?

காருண்யனின் கறுத்தமீசை
கார்மேகக் கூட்டமோ?
வாசன்வீசும் பார்வைதான்
வானவில்லின் வண்ணங்களோ ?

எழுதியவர் : ப்ரியாராம் (24-Sep-14, 3:16 pm)
பார்வை : 125

மேலே