கனிந்தது காதல்
விற்போல் வியாப்பித்தது உன் புருவம் தானே!
அப்படியிருக்க விழியால் அனாயசமாய் அம்பை அனுப்பிவிட்டாயே!
கண்களாலேயே
காந்தர்வ உலாவை
கட்சிதமாய் காண்பித்துவிட்டாயே
கள்ளியே!
கனிந்தது
கணப்பொழுதில்
காதல்!
விழுந்தேன்
விழவே மாட்டேன் என்ற
வீராப்பில் இருந்து!