என் கணவன்

என் அனைத்து உரிமைகளின் உறவானவன்
பாசத்தால் எனை கொல்லும் பகைவனே இவன்
என் உலக அரங்கத்தில் நாயகன் இவன்
அடிக்காமல் அழ வைக்கும் அன்பானவன்
கண் காட்டும் திசைகளின் பிம்பம் இவன்
காதலெனும் கவிதையில் ஆசான் இவன்
இவனே.............

என் கனவானவன்
என் நினைவானவன்
என் ஜனனம் இவன்
என் மரணம் இவன்
மொத்தத்தில் என் வாழ்கையின் அர்த்தத்தின்
மொத்த அத்தியாயம் இவன்

எழுதியவர் : அஞ்சலி (24-Sep-14, 8:15 pm)
Tanglish : en kanavan
பார்வை : 341

மேலே