உயிர்க் கருவி

அலுவலகத்திற்கும்
வீட்டிற்குமிடையில்
பந்தமெனும் பாதையில்
ஓடியோடி உருக்குலையும்
உயிருள்ள இயந்திரம் நான் !

சுவாசிக்கவும் , நடக்கவும்
தெரிந்து -
வாழ்கைக்கான வார்த்தைகளை
பாத்திரங்களுகேற்றவாறு
பரிமாறுகிற நாக்கசையும்
உயிர்க் கருவி நான் !

சூழ்நிலைகளுக்கேற்ப
தன்னைத் தானே
பழுது நீக்கி
எதிர்வினை ஏற்படாதவாறு
நேர்வினை புரியத்தெரிந்த
ஆளாயுதம் நான் !

குடும்பத்திற்கான
தேவைகளை -
சிரமேற்க்கொண்டு
உற்பத்திசெய்யும்
உறவு உபகரணம் நான் !

இஞ்சினெனும் இதயத்தில்
பாசம் , நேசம் , பரிவு
நட்பென -
அனைத்தையும் அனைவருக்கும்
பகிர்ந்தளிக்க
நிரப்பி வைத்திருக்கும்
ஒன்பது துவாரமுள்ள
ஓட்டைப்பாத்திரம் நான் !

விடுமுறை ஞாயிறன்று
மட்டும் திறந்திருக்கும்
ஏழு அறைகளுள்ள
சதைப்பெட்டி நான் !
அதற்கு எனை நானே
கைதியாயும் , காவலனாயும்
நியமித்து -
அதன் திறவுகோலை
கவிதையின் வசம்
ஒப்படைத்திருக்கும்
கனாக்காரன் நான் .

எழுதியவர் : பாலா (24-Sep-14, 7:55 pm)
Tanglish : uyirk karuvi
பார்வை : 131

மேலே