மூன்றாவது மனிதன்

ஆன்மீகம் அறிந்தேன்
ஆன்மீகவாதி இல்லை
பல நம்பிக்கைகளை
வெறுத்தேன் நாத்திகனும் இல்லை
இருக்கும் ஒன்றை
மிகைபடுத்தவோ
இல்லா ஒன்றில்
அதை சிறைபடுத்தவோ
விருப்பம் இல்லை

இறை மற
என சொல்பவனும் இல்லை
இறை வா
என கேட்பவனும் இல்லை
கோவில்களில் கடவுள்
என சொல்லவில்லை
காண்பதெல்லாம் கடவுள்
என சொல்லவில்லை

நான் இந்த இருக்கொள்கைகளை
கொண்டவனில்லை
நான் இருக்கொள்கைகளையும்
கொண்டவனில்லை

நான் கடவுளை
படைக்கவுமில்லை
கடவுள் படைத்தான் என
சொல்லவுமில்லை

நான்
நிம்மதியும் சந்தோஷமும்
அமைதியும் மட்டும்
விரும்பும் ஓர் சராசரி
ஆறறிவு விலங்கினம்

எங்கிருந்து வந்தேன்
என தெரியாது
ஆனால் வந்துவிட்டேன்
என்பதை அறிவேன்
ஓர்வேளை எப்படி அதை
அறிந்தால் சொல்லிவிடுகிறேன்

மதமோ மதமோ
நான் அறியேன்
ஆனால் மனிதம்
அதை அறிவேன்

நீங்கள் எப்படியோ
மோதுங்கள் ஆனால்
என்னை மட்டும் என்
போக்கில் விட்டுவிடுங்கள்
நான் தங்களைப்போல
இல்லை
தேவைகளை தீர்த்துக்கொள்ள
காலத்தில் உழைக்க மற்றும்
கற்றவன் அவ்வளவே

- இப்படிக்கு மூன்றாவது மனிதன்

எழுதியவர் : கவியரசன் (25-Sep-14, 8:11 pm)
பார்வை : 93

மேலே