அவரவர் உலகங்கள்
நலமா என்று ஆரம்பித்து
நடப்பு வாழ்வினை கதைத்துவிட்டு
இருண்டகாலம் தொடங்கி
இனிவரும் காலம் வரை
கற்றவை ,
கேட்டவை ,
காதில் பட்டவை ,
காற்றில் பறந்தவை ,
கேள்வியில் பிறந்தவை,
கனவில் வந்தவை ,
கண்ணிர் தந்தவை
என
அனைத்தும்
பரிமாற படுகிறது
சுவைக்கென
நடுநடுவே
ஏக்கங்களும்,
பெருமுச்சுகளும்,
சின்னச்சின்ன சிரிப்புகளும்
இடம்பெறுகின்றன..
கடந்த காலத்தை கழற்றிவிடும்
முயற்சியில் சோர்ந்துவிடும் மனதில்
மௌனம் பிறந்த சிறு இடைவெளியில்
அழைப்பேசியின் மறுமுனையில்
நட்பு சொன்னது
மின்சாரம் வந்துவிட்டது
மீண்டும் ஒரு பொழுதில்
அழைக்கிறேன் என ..
சரியென்று விட்டு
திட்ட தொடங்கினேன்
இன்னமும் வந்திராத எனக்கான
பேருந்தினை எண்ணி ..!!