கண்ணீர்

@@என் மரணம்@@@

என் மரணத்தில்
எனக்கு கிடைக்கும்
உண்மையான நினைவுபரிசு
என் அன்னையின் கண்ணீர் துளிகள் மட்டுமே...

ஆயிரம் உறவுகள்
எனக்கு சொந்தமானாலும்...
என்னை என்றுமே வெறுக்காமல்
என்னை சுமப்பவள்....அம்மா

எனக்காக தன் வாழ்வை
தியாகம் செய்தவள் ....

உடன் பிறந்தவள்
என்னை வெறுத்த போதும்
ஆறுதலாக இருந்தவள் ..

அவள் அன்புக்கு
இந்த உயிரை பரிசாக தந்தாள்
கூட ஈடு ஆகாது....

உன் அன்பு மட்டுமே
இப்புவியில் நாள் உயிர் வாழ
வற்புறுத்துகிறது....

மரணம் என்னை அழைக்கும்
நிமிடமெல்லாம் உன் தாய் உயிருடன்
இருப்பதை மறந்துவிடாதே
என்று என் இதயம் சொல்லிக்கொண்டே
துடிக்கிறது நிமிடம் ஒவ்வொன்றும்...

என்றோ மரணத்திற்கு
சொந்தமாக வேண்டிய இந்த உயிர்
இன்னும் இப்புவியில் வாழ காரணம்
என் அன்னையின் அன்பினால் ....

சில உறவுகளின் பரிசாய்
எனக்கு கிடைத்த ஆறாத காயங்களுக்கு
மருந்தாக உன் அன்பு மட்டுமே என்னில்...

உன் மடி சாய்ந்து
நான் அழுத ஆறாத காயங்களுக்கெல்லாம்
மருந்து உன் அன்பு மட்டுமே....

சொல்ல வார்த்தைகள் இல்லை...

என் நல்ல தந்தையாக ,சிறந்த ஆசானாக,
அன்பு காதலனாக ,நட்புகளாக ,சகோதர
சகோதரி , என எல்லா உறவகளையும் மொத்தமாய்
உன்னில் காண்கிறேன்...

நான் மறைந்தாலும் ...
என் ஆன்மா உன்னிடம் வாழும்...

என் ஆயுள் முழுவதும் ..
உன்னுடன் வாழ வேண்டும்....
வரம் கிடைக்குமா ?

என் மரணம் என்னை அழைத்தாலும்...
எனக்கு கிடைத்த மிக பெரிய பூ மாலை
உன் கண்ணீராக மட்டுமே இருக்கும்...

எழுதியவர் : சகிமுதல்பூ (26-Sep-14, 6:10 pm)
Tanglish : kanneer
பார்வை : 316

மேலே