விருப்பம்தான் விருப்பம்தான்
சராசரி சரிவிகிதத்தில்
சர்வ சாதாரணமாய்
சரம்சரமாய் சரவெடியாய்
சரசரவென சொரிந்திடும்
குறுந்தகவல்களின் சிறுமழை
கசகசப்பாக கடும்
கடுகடுப்பாக கடந்துவந்தது
கால்களில்லா காளையின்
கால்நடையினை போல்
காலையும் அதுவரை ...
இனியே காலை இனியே காலையென
கொட்டு முரசு கொட்டி முடிந்திட
கனகச்சிதமாய் வந்துசேர்ந்தது
இனியகாலை வணக்கமெனும்(gud morning)
கொஞ்சுமுன் குறுந்தகவல் ....
மழைவிட்ட சாரலை ரசித்தவளாய்
வாசித்தடங்கிய மழை கீதத்தின்
புகழ் கீதத்தினை வாசிக்க துவங்கினாய்
உனையன்றி வேறெதுவும் ரசிக்காத
ஓர் கிறுக்கு ரசிகனிடம் ...
அழகிய மழை வெளியே ரசித்தாயா ??
உடன்பாடில்லையென உடனடியாய்
உள்ளதை உள்ளபடி உரைத்தேன் ..
"contradictory " என்றாய் கோவமாய்
கவிஞனாய் இருந்தும் எப்படி இப்படி என்று ?
மழையினில் நனைந்து
குழைந்திட விருப்பம் தான்
உடல் தொட்டிடும் துளிகளது
உன் உடல் பட்டுத்தெறிக்கும்
துளிகளாயினில்...
பரவிடும் குளிரினில்
வெளிறிட விருப்பம் தான்
கடுங்குளிர் வெளிப்படும் பொழுது
போர்த்திக்கொள்ளும் போர்வையாய்
நீ இருப்பாயெனில் ..
அதிவெயிலையும் ரசித்து
துயில்கொள்ள விருப்பம் தான்
நிதர்சன நிழலினில் நீ இருந்து
உன் மடியினில் எனக்கு நிழலடக்கம்
தருவாயெனில் ....
வீசும் அரும் தென்றலில்
ஒன்றிடல் கூட விருப்பம் தான்
வெளிப்படும் உன் சுவாசத்தின்
சாயலினை கொஞ்சம் கடனாய்
கொண்டிருந்திடினில் .....
விருப்பம்தான் விருப்பம்தான்
யாவுமாகிட விருப்பம்தான்
என் யாவுமானவளாய்
நீ இருக்க ....

