வானம் தொடு

விருட்சம் ஒன்றிற்கான ஒத்திகையோடு
விதையாக விழுந்து
இன்று தாய் மண்ணில் நீ தளிர்
சழைத்தலை களை சமர் செய்ய விளை
பூமியை முட்டி வேர் இறக்கு
வானம் தொட வளர்
உளிக்கு பாறை பணிந்து “உரு”வாகும் போது
உனக்கேன் பயம், நீ உயிர்
உயர தாவி விளைய வேண்டிய பயிர்
திடம் கொள் தீர்மானம் எடு
ஆளுமை முற்ற அவதாரம் பூண்
சுவர்கத்து சுவைமிகு
கனிகள் உனக்குள் பூங் கனவாய்
நனவாக்க வேண்டும் நகர்
வாழ்வின் எல்லை எது யோசி
வரலாற்றின் மேதைகளை வாசி
உனக்கென ஓர் இடம் பிடித்து வசி
கண்டு பிடிப்புகளுக்குள் கண்டுபிடி
அர்த்தமற்றதை அழி
இருபதற்கு எது தேவை ஆராய்
இன்னொரு விதி செய்
விழத் தெரியாதவனால்
எழத் தெரியுமா என்ன?
வீரியத்தோடு வேர் விடு
இன்றைய சறுக்கல்-நாளைய
சாதனைக்கான சந்தர்பத்தை
ஏற்படுத்த உயர்த்தும் ஏணி
புரிதல் கொள் பொய்,புறம் கொல்
அசதி தவிர் ஆர்வம் எடு
ஆணிவேரை ஆளப்பதி
வானம்வரை வளர
வசதி இருக்கிறது.



ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.


]ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினம்.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (1-Oct-14, 2:07 am)
சேர்த்தது : Rozhan A.jiffry
Tanglish : vaanam thotu
பார்வை : 183

மேலே