இருண்டு போகும் எம் வாழ்வு

செல் வந்து தாக்கியதால் உடைந்து
போனது என் வீடுமட்டுமல்ல
என் குடும்பமும் தான்
சிதறிப் போன தாயின் அருகில்
என் தங்கையின் அழுகுரல்
ஓடிச்சென்று வாய்ப்பொத்தி
அணைத்துக் கொண்டேன்
எனக்கிருந்த ஒரே உறவையும்
கொன்று விடுவார்களோ எனப்
பயத்தில் ..........

தாயின் மரண கோலம் கண்டு
எனக்கு அழுகை வரவில்லை
இந்த பலஸ்தீன மண்ணில்
பல தாய்களின் மரணம் கண்டதால்

தங்கையை அழைத்துக் கொண்டு
திக்குத் தெரியா வழியில் ஒதுங்கி
ஒதுங்கி நடந்தேன்
பார்க்கும் இடமெல்லாம் அப்பாவி
மக்களின் மனிதத் தலைகள்

தூரத்தே என் தங்கை வயது
ஒரு பெண் பிள்ளை மனித
முகம் கொண்ட பேய்களின்
காம இச்சைக்கு இரையாகிக்
கொண்டிருக்கிறது . என் தங்கையின்
கண் பொத்தி ஒழிந்து கொண்டேன்
என் தங்கையும் பேய்களுக்கு
இரையாகி விடக் கூடாது
என் நினைத்து ......

ஐ . நா வில் இதெல்லாம் மனித
உரிமை மீறல்களில்லையா ?
அங்க வாய் மட்டும் பேசினால்
போதுமா ? செயல் வேண்டாமா ?

பலஸ்தீனில் சிறுவர்களின் எதிர்
காலமும் நிகழ காலமும்
இருளாகிப் போகிறதே
என்னை விடுங்கள் என் தங்கைக்கும்
உலக சிறுவர்களுக்குமாவது
யுத்தம் இல்லா உலகம் காண
வழி செய்யுங்கள்

எழுதியவர் : fasrina (1-Oct-14, 8:59 am)
சேர்த்தது : fasrina
பார்வை : 96

மேலே