என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் - 9
ஒட்டுமொத்த
நாமக்கல்லிற்கே
பட்டை நாமம்
போட்டதேனடி
குட்டி குட்டியான
நின் குருவி முட்டை
கண்களை கொண்டு ..
*****************************************************************
பாவம் , பச்சை கிளிகள்
தன் அழகான அலகு அதை
உவமையாய் கொண்டு
உச்சத்தில் இருந்தது ..
சற்றும் யோசியாது
சமன் செய்து சமாளியுங்கள்
மிச்சம் மீதி இருந்திடின் என்று
தரைதட்டி வீழ்த்திவிட்டாய்
நின் கூர் எழில் நாசி கொண்டு ..
*****************************************************************
கண்களால்
வாசி வாசியென வாசித்தும்
நெடுநேரம் கடுந்தவமாய்
யோசி யோசியென யோசித்தும்
நடுசாமத்திலும் நான் நின்றதுண்டு
சொர்கத்தின் வாசல்கள் அதும்
இம்மாதிரி தான் இருக்குமோவென
முன்மாதிரியாய் நீ பதித்த
தாடை தூக்கி விட்டம் பார்க்கும்
உன் அழகு நிழற்படத்தினில்
நின் நாசியினை மட்டும்
நேசித்து பார்த்தபடி ......