முத்தமிழைப் பித்தெனச்சவக்குழி எத்தர்கள் தள்ளும்
நித்தமுமிவர் ஞான மெய்ப்பொருள் தேடுங்கால்
மெத்தப் பொன்பொருள் அவரவர் வீடுசேர்த்தே;
சித்தமும் குளிர்ந்தே இவர் சிறுகுடி குடில்நாடியே
மொத்த நாடும் மொழி தமிழ் என ஏடு துறந்தே;
கொத்தவரும் காடுவழி நச்சுஅரவம் ஆடிவேகம்
முத்தமிடும் போது கொடுவிடம் தலைக்கேற
சத்தமும் அடங்கி இடுகாடுஎல்லை முன்னயே
வித்தகமென முத்தமிழ்ச் சங்கே ஊதாயோ !
முத்துப் பாண்டி நாட்டினில்,முல்லைக் காடாம்
கோவையில், சொத்துசுகம் நான் களிக்க
பெத்துப் பிறப்பும் போற்ற,பேணும்சுகம் தீரவே
சுத்தக்கணக்குடன் வருமான நான் காட்ட
அத்தமெரி நட்சத்திரம்போல் புத்தநெறிகாணவே
பித்தம்கொண்டு பிழைக்கும்வேளைதனில்
முத்தொக்க முத்தமிழைப் பித்தெனச்சவக்குழி
எத்தர்கள் தள்ளும் தமிழகத்தில் தனயன்வாழவே.

