இனிக்கும் கூட்டின் படிப்பினை

..."" இனிக்கும் கூட்டின் படிப்பினை ""...

உறக்கம் விளித்து மீளுறக்கம்வரை
அயராத உழைப்பின் ஆத்மார்த்தம்
ஒற்றுமை உயர்வுதரும் பண்பினை
ஒட்டுமொத்த உலகிற்கு உணர்த்தும்
மரக்கிளையாடும் நேயத்து சின்னம்
தேனினை ருசிக்க தெரிந்தவனுக்கோ
தேனீ வாழ்வை ரசிக்கதெரியவில்லை
உழைப்பின் உயர்வு சேமிப்பின் சிறப்பு
ஆசையா சேர்ப்பதெல்லாம் தனக்கன்று
தான் வாழுகின்ற சமூகத்திற்க்கென்றும்
மனிதன் மறந்துவிட்ட மனிதமிதுவே
கடின உழைப்பின் இனிக்கும் வாழ்வு
கற்றுத்தருகின்ற இயற்க்கை ஆசான்
அடுக்கு குடியிருப்பின் ஒற்றுமை கூடு
அண்டை வீட்டாரை அறியாதவனுக்கு
அன்றாடம் சொல்லும் அழகிய பாடம்
கூட்டு முயற்ச்சியை காட்டும் காட்சி
சுயனலவாதிக்கு சூளுரைக்கும் பாரு
குடும்பத்து வாழ்வின் குருதியோட்டம்
தாய் அரவணைப்பில் அமைவதுபோல்
அங்கேயும் ஒரு ராணியின் ஆட்சியே ,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (2-Oct-14, 11:05 am)
பார்வை : 99

மேலே