என்னதான் நடக்கும் நடக்கட்டுமே எத்தனை குப்பைதான் சேரட்டுமே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
எத்தனை குப்பைதான் சேரட்டுமே ..
தன் கழிவுனாலே தான் பொது
அழிவு என்பதை
பகுத்தறிவு மனிதன் யோசிக்கட்டுமே

வேதியப்பொருள்கள் கலந்து விட்டால்
மருந்துக் கழிவுகள் கலந்துவிட்டால்
கடவுளும் உன்னைக்
கைதூக்க வர மாட்டான்
கலி முடிவை அவன்
கடை நெகிழிப்பையில்
தொடங்கிவிட்டான்

தாகம் என்பதை மறந்துவிடு
தண்ணீர் இல்லை இறந்துவிடு
ஆக்சிசன் என்பதை அளந்து எடு
அடுத்த வீட்டினில் கடன் வாங்கு .....

படித்த முட்டாள் பலகோடி இங்கு
குடிக்கும் ஞானி பலகோடி
துடிக்கின்ற பறவைக்கு பழம் எங்கே ?
வெடிக்கும் நிலத்துக்கு நீர் எங்கே ?

இருக்கிற வரைக்கும் வாழ்ந்துவிட்டு
இருப்பதையெல்லாம் கெடுத்துவிட்டு
இருக்கும் வீட்டில் பிள்ளைகள் எதற்கு? நீ
இருக்கும் போதே சாவதற்கு ...

இயற்கையை மட்டும் துதித்துவிட்டு
இறைவன் பொம்மையை கரைத்துவிட்டு
இருக்கும் கடல்வாழ் உயிரினம் அழித்துவிட்டு
காற்றும் வாங்கவரும் என்ன மமதை உனக்கு.

துரித உணவும், பை அடைத்த
நொறுக்குப் பண்டமும் உடலையும் கெடுக்குமே
மக்கா பொருள்களின் அழகு,
பரம்பரையையே பாழாக்குமே - போகட்டும்
பரலோகத்திலாவது பசுமை உணவு சாப்பிடு.

எழுதியவர் : சந்திரசேகரன் சுப்பிரமணிய (2-Oct-14, 11:07 am)
சேர்த்தது : Chandrasekaran Subramaniam
பார்வை : 126

மேலே