சாதீ

ஐயோ தீ!
அணைக்க ஓடினேன் என்னையும் பற்றிக்கொண்டது.
அணைக்க இயலாத் தீ,
அணையாத் தீ,
சாதீ!

ஆளை அழிக்கும் தீ
ஆண்டவனும் அணைக்க முயன்று
ஆடிப்போய்விட்டான்
ஆட்டிப்படைக்கும் தீ
சாதீ!

மரண ஓலமிட வைக்கும் தீ
மனத்தைக் கல்லாக்கும் தீ
மனிதத்தைத் துண்டாக்கும் தீ
சாதீ!

கூறுபோட வந்த தீ-இறையைக்
கூறுபோட்டத் தீ-மானுடத்தைக்
கூறுகளாக்கியத் தீ
சாதீ!!!!

எழுதியவர் : பபியோலா (2-Oct-14, 12:23 pm)
பார்வை : 398

மேலே