நெருப்பை நெஞ்சுக்குள் வை

உன்னுள்
நீ
மரித்துப்போ ?
மறுமுறையாவது
மனிதனாய்
பிற ...

மனிதப்பிறவியின்
மகத்துவம்
உணர் ...

கண்விழி
காக்கும்
இமையாய் இரு ..

காலமதன்
சுழலில்
கவனமாய் ...நட

சூது...வாது..
சுயநலம்
களை...

சூரிய சுடராய்
சுயமாய்
எரி...

நிலவின்
சூட்சுமம்
அறி ...

புள்ளியானாலும்
புனர்ஜென்மம்
எடு ...

விதையினுள்
விருட்சம்
காண்...

மண்கீறும்
மகத்துவம்
அறி ...

ஆகாயத்தின்
ஆற்றலை
அள...

ஆழ்மனதின்
இரகசியம்
தேடு ...

புரிதலின்
அவசியம்
உணர் ...

கவலைகளை
காற்றாய்
கட ...

நீராலே
உரு
எடு ...

நெருப்பை
நெஞ்சுக்குள்
வை ...

தேடலின்
இரகசியம்
அறி ...

தோல்விகளிடத்தில்
அனுபவம்
சேகரி ...

வெளிச்சம்
தேடும்
இதயம் ...நாடு ...

சாதனையாளரின்
சரித்திரம்
வாசி ...

சரித்திரத்தில்
நீ..வர
யோசி ...

முதலில் ...நீ ..

"உன்னை உணர்
உண்மை தேடு
சுயமாய் யோசி
சுதந்திரனாய் இரு"

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (2-Oct-14, 9:04 am)
பார்வை : 630

மேலே