என்னமோ ஏதோ
காலை வெயிலை
கடிந்து கொண்டே
அலுவலகம் நுழைந்த பொது,
கரண்ட் இல்லை...
குளிர்ச்சியாய் அவள் மட்டும்!
பகலுணவு
பிடிக்கவில்லை...
வாடகை ரூமில்
தனியாய்த் தின்ன..
போன மாத கடனும்,
அடுத்த மாத செலவும் என
அர்த்தமற்றுப் போனது
இந்த மாத சம்பளம்!!
படிக்கும் போது
படித்ததெல்லாம்
பொய்யாய்ப் போனது...
அனுபவம் இன்னும்
கற்றுக் கொள்
என்று அறையும் போது...