ஒவ்வொரு நொடியும் புதிய தொடக்கமே-- அரவிந்த்
அலட்சியம்
அது தோல்வியின்
முதலடி,
தோல்வி
அது வெற்றியின்
முதல் படி...
அலட்சியங்களை அப்புறப்படுத்து
முயற்சித்து
மாண்டு போவது தவறல்ல,
முயற்சிக்காமல்
வாழ்ந்து கிடப்பதே தவறு...
எரிமலையாய்
உனக்குள்ளே குமுறிக்கொண்டேயிரு,
என்றோ ஒருநாள்
தீப்பிழம்பாய் வெளிவருவாய்...
சோம்பலை முறித்தெறி,
இல்லையேல்
அது முறித்துவிடும்
உன் வாழ்க்கையை...
கடந்து செல்லும் மேகங்கள்
காயப்படுத்த இயலாத
சூரியன் நீ,
கடந்து போகும் தோல்விகள்
உன்னை துவண்டு போக செய்ய
இயலாது...
"பிறப்பதும் இறப்பதும்
மிருகங்களும் செய்கிறது,
பின் மனிதர் நாம் எதற்கு...? "
பிறப்பின் அர்த்தம் தேடு
செல்லும் இடம்
தெரிந்தால் தான்,
பாதையை தேர்ந்தெடுக்க முடியும்...
தூங்கும் போதும் விழித்திரு
தூக்கத்தை தியாகம் செய் ,
வெற்றியை வாங்கி விடலாம்...
கடந்ததை எண்ணி
கவலை கொள்ளாதே,
அது நான் திரும்ப இயலா
ஒரு வழிப்பாதை,
முன்னேறு
பின்னோக்கிப் பார்க்காதே....
மனிதா நாளை
அது இன்னும் விடியா
ஓர் இரவு..
நேற்று அது மடிந்த
ஓர் நிகழ்வு..
இன்று,
அது மட்டும் தான்
வாழ்கையின் இயல்பு...
நாளைக்கான வருத்தத்தை
நாளை படலாம்
இன்றைக்கான வாழ்க்கையை
இன்று தான் வாழ முடியும்
வாழ்ந்து விடு....!!!