பிரிவு உணர்த்திய காதல்
பிரிகின்ற போது புரிகின்றது-உன் மீது
நான் கொண்ட காதல்……..
வார்த்தைக்கு வார்த்தை ஏதேதோ
பேசியிருக்கின்றேன் ஆனால் இன்றுமட்டும்..
உன்னிடம் பேச என் நா… ஏன் மறுக்கின்றது?
சேர்ந்திருந்த போது புரியவில்லை
காதல் என்று – கூடி வாழ்ந்து
கேலி செய்து பேசிய போதெல்லாம்
வரவில்லை காதல் என்று…
இன்று பிரிவு ஒன்று சுவர் போட
உணர்கிறேன் இதுவே காதல் என்று…
இப்போதும் சொல்லிவிடத் துடிக்கிறேன்
வந்து உன் முன் நிற்கிறேன்…
பேசிட மட்டும் வரவில்லை வார்த்தை எனக்கு
காதல் என்று சொல்லி உன் நட்பை
இழந்து விடுவேனோ என்று என் மனது
தயங்குகின்றது……
நட்பென்றால் எல்லோர் மீதும் வருகின்றது
உன்னிடம் மட்டுமேன் அது காதலாய் மாறியது