உன் பதிலை சொல்லிவிடு
அடி பெண்ணே ..!!
அவன் காதல் என்னும் வேள்வியில் ..
உன் நினைவுகளால் தீ மூட்டி .
தன் மனதை எரித்து கொண்டு..
உன் சாதகமான பதிலுக்காக யாகம் நடத்துகிறான் ..!!
அவன் மனம் முழுவதும் எரிவதற்குள்
உன் பதிலை சொல்லி சொல்லிவிடு..!!
ஏனெனில்...
அந்த மிச்சம் மீதி உள்ள
மனதில்தான் நீ காதலி என்பதற்கான
அடையாள சுவடுகள் உள்ளது ...!!