என்னவளே - நாகூர் கவி
உன் மௌனம்
களைந்த பேச்சு...
நீ கொட்டித் தீர்த்த
அடைமழை...
பாவை நீ
பூட்டி வைத்த
பார்வைகள் அனைத்தும்...
என் தாய் மண்ணின்
இருளைப் போக்கும்
மின்சாரமடி...
சுண்டு விரலால்
ஈர்க்கும் காந்தமடி...
சுருண்டு விழுவேன்
உனை பார்த்த நொடி...
என் கவிதைகளுக்கு
நீ சந்தமடி...
என் கற்பனைக்கு
மட்டும் சொந்தமடி....!