வலி
மன இழையில் அன்பு வைத்து
நெய்த சேலை இன்று உந்தன்
வார்த்தை முள்ளு பட்டு கிழியுது..
நெஞ்சின் ஓரம் நீங்கிடாது
வந்த சுமை கண்ணில் ஏனோ
கண்ணீர் தந்து மறையுது...
மூடும் விழி இடுக்கில் புகும்
மீதி கண்ணீர் மீண்டும் நெஞ்சில்
பாரம் கொண்டு சேர்க்குது..
என்னை இன்று தீண்டும் வலி
உன்னை வந்து சேர்ந்திடாது
வாழ்ந்திடவே எந்தன் மனம் ஏங்குது..!
...கவிபாரதி...