மனதில் ஒரு சோகம்,
தெய்வம் இல்லாதக் கோயிலில் தீபம் எரியுமா?
தாய் இல்லாத வீட்டில் பாசம் கிடைக்குமா?
ஒளி இல்லாத இருட்டில் வழித் தெரியுமா?
ஓசை இல்லாமல் மணி ஒலிக்குமா?
ஓட்டைப் படகு நீரில் நீந்துமா?
ஓட்டைப் பண்டம் மையலுக்கு உதவுமா?
ஒப்பாரி ராகம் இனிமைத் தருமா?
அம்பாரி இல்லாத யானை அடங்குமா?
கேள்வி இல்லாமல் பதில் வருமா?
வேள்வி இல்லாமல் யாகம் நடக்குமா?
பூ இல்லாமல் நார் மணக்குமா?
பூஜைக்கு இல்லாத பக்தி சிறக்குமா?
பாதை இல்லாமல் பயணம் தெரியுமா?
பதைக்கும் நெஞ்சில் பயம் விலகுமா?
உதைக்கும் கால்கள் அணைக்குமா?
விதைக்கும் விதைகள் வளருமா?
எங்கே போனது தெய்வம்?
எங்கே எரியுது தீபம்?
எங்கே இருக்கிறது தாய்மை?
எங்கே போனது பாசம்?
ஒலி தரும் மணியின் ஓசை எங்கே?
ஒளி தரும் வெளிச்சம் எங்கே?
படகில் ஓட்டைப் போட்டது யாரிங்கே?
பண்பாட்டில் ஓட்டைப் போட்டதும் யாரிங்கே?
ஒப்பாரி ராகம் இசைக்க வைத்தது யாரிங்கே?
அம்பாரியை ஒடித்தது யாரிங்கே?
கேள்வியாய் தமிழகம் ஆனதிங்கே.
வேள்வியாய் பற்றி எரியுது நெஞ்சங்கள் இங்கே.
நந்தவனத்தில் தீ வைத்தது யாரிங்கே?
நலம் கண்ட தமிழகத்தின்
நலிவைக் கண்டு மகிழ்பவன் யாரிங்கே?
இரட்டை இலையில் ஒரு இலையை
இருட்டில் தள்ளியவன் யாரிங்கே?