பயம் தேடல் குற்றம்
அன்று இரவு ஓலம்.... ஒரே சத்தம்..... அறைகூவல் செவியின் மரண ஓலம்.....
யாரோ அவனை துரத்துவது போல் ஒரு பட படப்பு நடுங்கிய தேகத்துடன் நடந்தான்.... அன்று இரவு அவன் செல்போன் கடையில் செல்போன் விற்கும் பணி முடிய நேரம் அதிகமானது. ஒரு மணி அல்லது அதற்கு மேல் இருக்கலாம் அவன் கடிகாரம் சரி இல்லை என்பதற்காய் சரி செய்ய கொடுத்திருந்தான்.....
வீடு இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது.... நடக்க நடக்க பயம் தொற்றியது...
அந்நேரம் யாரோ ஒருவன் இன்னொருவனை துரத்துவது அவன் பார்த்துவிட பயம் மேலும் அதிகரித்தது....
துரத்தியவன் ஓடியவனை அடித்து கொண்டிருக்க இவன் பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்....
வீடு நோக்கி வேகம் பிடித்தான்... வீடும் அருகில் வர மனதுக்குள் இனம் புரியா மகிழ்ச்சி...
வீட்டுக்கு சென்று கதவை தட்டினான். அவன் அப்பா கதவை திறக்க ரெண்டு திட்டும் அவனை நோக்கி வீசினார்.. அவன் காதில் அது விழதவனாய் தன் அறை நோக்கி பயணித்தான்.
அவன் கண்ட காட்சி மட்டும் அவன் முன் வர அதிர்ந்தவனாய் தூங்க முயன்றான்... இரவு மணி 2.30 யை தொட்டது. அவன் கண்கள் தூக்க கோலம் வரைந்தன....
அதிகாலை விழித்தான்....
அவன் வீட்டில் காவலர் விசாரித்து கொண்டிருந்தனர். திகைதவனாய் அறையில் இருந்து வெளியில் வந்தான். காவலர் அவனை நோக்கி நீங்கள்தான் ரமேஷ் -அ என்றனர். ஆம் என்றவனை எதுவும் விசாரிக்காமல் எங்களுடன் காவல் நிலையம் வாருங்கள் என்றனர்... ஏன் என்று கேட்டான், கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணை என்றனர் காவலர்..
கொலையா? அவன் அப்பா வினாவ, காவலர் ஆம் என்றனர். இவன் திகைப்புடன் என்ன நான் கொலை வழக்கில் சம்மந்த பட்டவனா? என்ன சொல்க்கிறீர்கள் என்றவனாய் காவலரை பார்க்க, அவர் வேலு என்பவன் உங்கள் கடையில் வேலை செய்பவன் தானே அவன் நேற்று இரவு கொலை செய்ய பட்டான் என்றார். வேலுவா? எப்படி என்றான். அது தெரியவில்லை யாரோ அடித்து கொன்றனர் என்றார் காவலர்.
காவலருடன் சென்றான்.
காவல் நிலையத்தில் வேலுவின் அம்மா இருப்பதை கண்டான். அவர் இவனை பார்த்தவுடன் அய்யா என் மகன் செத்து போய்டான் என்றார்.
காவலர் வேலுவை பற்றி அவனிடம் விசாரித்தனர்,
அவன் என் கடையில் சில மாதத்திற்கு முன் தான் சேர்ந்தான் என்றான் ரமேஷ்.
அவனுக்கு விரோதி யாரும் உண்டா என்றார் காவலர்.
எனக்கு தெரியவில்லை என்றான்.
அவன் உங்கள் கடையில் வேலை செய்யும் விதம் எப்படி என்றார் காவலர்.
நல்ல முறையில் வேலை செய்வான்...
சரி நீங்க போகலாம் நாங்கள் கூப்பிடும் போது வாங்க என்றார் காவலர்.
சரி என்று கிளம்பியவன்
யோசித்து கொண்டே நடந்தான்.
ஒரு மாதத்திற்கு முன் வேலு யாரோ ஒரு முகம் தெரியாதவனுடன் பேசி கொண்டிருந்தான் தன்னை பார்த்தவுடன் அவனை மறைவாக அழைத்து சென்றான்.
கடைக்கு வேகம் பிடித்தான்...
ரமேஷ் வாங்கிய செல்போன் குறைந்த விலை போனை அதிக விலையில் விற்றான் என்ற விவரம் அவன் கடையில் உள்ள வேறு ஒருவன் மூலம் தெரிந்தது. அவன் விற்கும் போது சிலரிடம் கடை தன்னுடையது என்று சொல்லி வட்டி கடன் வாங்கியது அவன் மூலம் ரமேஷ்க்கு தெரியவந்தது.
ஒரு வேலை வட்டி கொடுத்தவன் கொன்றானா? இல்லை அதிக விலையில் வாங்கியவன் போனின் விவரம் அறிந்து கொன்றானா ?
குழப்பத்துடன் ரமேஷ்!!!!
-மூ.முத்துச்செல்வி

