கண்ணம்மாவின் எழில்

பால்மொழி
கொஞ்சும் தேன்மொழி - கேட்க
நாணி போகும் யாழி
பூவிழி
சின்ன மான்விழி - என்
மனதை உருட்டும் சோழி
வானமும் - வந்து
வணங்கிடும்
வனிதையர்குல ராணி
பூக்களும் - கவி
பாக்களும்
புகழ் பாடிடும்
எழில் கேணி
சில்லென சில்லென
மனதை வருடும்
சிற்றிடை அழகு ரதமோ
புல்லினம் கொண்ட
பனி மகுடம் - பூவையின்
பொற்பாதமோ!
கன்னங்கள் இரண்டும்
பூஞ்சோலை - முத்த
வண்டுகளாடும் ஊஞ்சலோ !
சொல்லுக்குள் அடங்கா
கவிபோல - அவள்
சேலைக்குள் உறங்கும்
அலைகள்
கண்டதும் விழிகள்
பாடாதோ
காதலினால் - சில
ஜதிகள்
தேனும் பாலும் இழைத்தவளோ
நிலவில் குளித்த நங்கையோ
நாணம் மோனம் கச்சிதமாய்
நிறைந்த அழகு சிலையோ
ஏழுலோகம் பாராட்டும்
ஏந்திழையும் அவள்தானோ
எடுத்து சொன்ன
உவமையாவும் - பெண்
எழிலில் பாதிதானோ!