நிலை இல்லா நட்பு

வரம் என்றனர்
கடவுளுக்கு கிடைக்கவில்லை
நிகரில்லா உறவு

எனக்கும் நட்புக்கும்
வெகு தூரம்
யாரை நம்பினாலும்
பின் ஏன்
இவர்களை இந்த
அளவிற்கு நம்பினேன்
ஏமாற்றம் மிஞ்சியது

நட்பு வட்டாரம்
வேண்டினால் அழைக்கும்
இல்லையேல் நான்
சாலையில் செல்லும் யாரோ

நட்பில் நான் காகிதம்
என்று நினைத்தேன்
காகிதம் தான்
திசு பேப்பர்

நிலை இல்லா நட்பு
மனம் திறக்க ஒரு தோழி இல்லை
தோள் கொடுக்க தோழன் இல்லை
நட்பு கைக்கு எட்டா
வானில் செல்லும் பறவை

கடந்து வந்த பாதையில்
நட்பு என்ற உறவு
தந்த பரிசு
மனதில் அழியாத
முள்ளில் எழுதபட்ட
நினைவுகள்

என்னுடன் இறுதி
வரை பயணிக்கும்
என் மனசு
என் இணையில்லா
நண்பன்

-மணி

எழுதியவர் : (6-Oct-14, 2:31 pm)
Tanglish : nilai illaa natpu
பார்வை : 1603

மேலே