இதழின் கேள்வி
பற்றி இழுத்திட
பாவையிதழ் பணித்திட
கற்றிட காமம்
கலையென தொடர்ந்திட
பெற்ற சுகமோ
போதையா மயங்கிட
வற்றா ஆசையோ
வாழ்வை சுகமாக்கிட
முல்லை இதழாள்
மூச்சடக்க முடியாது
எல்லை இதுவென
இவனிடம் சொல்லிட
சொல்லை மதித்து
சும்மா இருந்திட
"கல்லா" மாமனே
கருத்தாய் கேட்கிறாள்