என் காதலும் ஒரு உயிராய்
ஒரு நொடி பார்வைதான்
உருக்குலைய செய்தது
ஒற்றை வார்த்தைதான்
உன்னை கேட்டு ஏங்குது
உறக்கம் பிடிக்கவில்லை
உணவும் பிடிக்கவில்லை
உறவுகள்பிடிக்கவில்லை
உலகம் பிடிக்கவில்லை
உன்னை காணமல்
நகரும் நொடிகளெல்லாம்
நான் கண்ட நரகமடி
வேண்டும் உன் தாய்மடி
என்னை நேசித்தால்
எதையும் நான் கொடுக்க
எதிர்பார்த்து காத்து நின்றேன்
என் காதலை நீ மறுக்க
என்னிடம் நீ கேட்க்க
என் உயிரை தேர்ந்தெடுத்தாய்
என் காதலை மறுத்து விட்டாய்
இரண்டுமே ஒன்றுதான்
என்பதில் ஐயமில்லை
உனக்கென்ன நான் தருவேன்
என் காதலும் ஒரு உயிராய் >>>>>>>>