அதிர அதிர

கவிதைக்காரனை
கிறுக்கன் என்று
கூறுவதை
உணரும் தருணத்தில்
என் கழுத்தை
அறுத்துக் கொண்டிருந்த
கூட்டத்தில்
அழகி ஒருத்தியின்
அதரம்
அதிர்ந்ததைப் பற்றி
உடைந்த விரல் கொண்டு
குருதியாய் மண்ணைக்
கீறிக் கொண்டிருந்தேன்....
"கத்தி, அறுத்து
முடிக்கும் முன்னே
கழுத்திறங்கி தொங்கின..."
கவிஜி