கொட்டு முரசினை

எட்டு திசையிலும் கொட்டு முரசினை!
பட்ட துயரங்கள் விட்டு விலகட்டும்
கெட்ட பிரிவினை கெட்டு மறையட்டும்
............. ஒட்டி உயர்ந்திவோம்!-மனதை
.............கெட்டி படுத்திடுவோம்!
தட்ட திறந்திடும் வெற்றிக் கதவுகள்
முட்டும் தடைகளை வெட்டி அறுத்திடு
கட்டு கதைகளை எட்டி எறிந்திடு
.............வட்ட நிலவினைப்போல்-ஒளி
.............இட்டு மிளிர்ந்திடுவோம்!
நட்ட நடுநிசி கொட்டும் மழையினில்
கட்டிப் பிடித்திடும் பட்டு தலையணை
சற்று விலக்கிடும் தொட்ட குளிரினை
..............பட்ட பகலினிலே -அதை
..............விட்டு உழைத்திடுவாய் !
சுற்றி உலகினை கற்று தெளிந்திடு
குற்றம் விலகிடு சுற்றம் இணைந்திடு
தொற்றும் கிருமியாம் பற்றும் நெருப்பதாம்
...............கெட்ட சுயநலமே!-அதை
...............விட்டு விடல்நலமே!