முயற்சி செய்
விழுவது இயற்கை
எழுவது உன்னிடம்
அருவிகள் அழுவதில்லை
விழுவதைக்கண்டு
ஓடிக்கொண்டே இரு
தேடலை நோக்கி
உலக கடிகாரத்தில்
நொடிமுள் ஓய்வதில்லை
இருளுகிறதா இருக்கட்டும்
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் விழிகளாக கொள் வவ்வால்கள்
பறப்பதை பார்
தடை உடைக்க
இயலவில்லையா தேவையில்லை
பனிக்கட்டி வழிமறித்து
கடல் மறைவதில்லை
வேறுவழி தேடு
ஓய்வு வேண்டுமா
எடுத்துக்கொள் மீண்டும்
உழைப்பதற்காக மட்டும்

