அன்புடன் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
வானும் மழையும் சேர்ந்து
வரைந்த ஏழுவண்ண வானவில்லுக்கு
இன்று பிறந்த நாள்...
வண்ணமும் வாசனையும் சேர்ந்து
தொடுத்த பனி பூஞ்செண்டுக்கு
இன்று பிறந்த நாள்...
மொழியும் இலக்கணமும் சேர்ந்து
எழுதிய கைக்கூ கவிதைக்கு
இன்று பிறந்த நாள்...
சங்கும் நாதமும் சேர்ந்து
வடித்த மங்கள இசைக்கு
இன்று பிறந்த நாள்...
காற்றும் கரையும் சேர்ந்து
கொடுத்த அலையின் ஓசைக்கு
இன்று பிறந்த நாள்...
பஞ்சபூதங்களும் சேர்ந்து
படைத்த பிஞ்சுக்குளந்தைக்கு
இன்று பிறந்த நாள்...
ரம்பையும் மேனகையும்
அளித்த ஆலோசனை படி
பிரம்மன் படைத்த
என் அழகு ஊர்வசிக்கு
இன்று பிறந்த நாள்...
பார்வதியும் பரமேஸ்வரனும் சேர்ந்து
பெற்றெடுத்த அஷ்டலக்ஷ்மிக்கு
இன்று பிறந்த நாள்...
என் உடலும் உயிரும்
ஒரு உருவாக்கி
என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும்
என் மனைவிக்கு
இன்று பிறந்த நாள்...
என் இனியவளே உனக்கு - அன்புடன்
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
என்றும் காதலுடன் உன்னை என்னுள்
வைத்திருக்கும் உன் கணவன்