என்னுள் நீ

உன் நினைவை
உப்பு மூட்டையாய்
சுமந்தபடி
கடந்திடும்
நாட்கள்

இரவு முழுக்க
நீளும் கனவுடன்
தொடர்ந்திடும்
தூக்கம்

உன் முகத்தை
தினம் தினம் பிரதிபலிக்கும்
நிலவு

உன் சுவாசத்தை
என்னிடம் சேர்க்கும் தென்றல்

உன் வாசத்தை
வெளிபடுத்தும
மலர்கள்

உன் அழைப்புக்காய்
அடிக்கடி கைபேசியை பார்த்திடும்
என் ஏக்கம்

என எப்பொழுதுமேஎன்னுடன்

கலந்தே வாழும் உன்னை

காதலிக்க போவதில்லை

நான் காதலித்தாள்

நீ வேறு நான் வேறு
என்று பொருள்படும்

நீ காதலியல்ல

நானும் காதலனல்ல

அர்த்தநாரியாய் நாம்
தொடரும் எப்பொழுதும்
இந்த
பயணம்

எழுதியவர் : ந.சத்யா (10-Oct-14, 4:49 pm)
Tanglish : ennul nee
பார்வை : 112

மேலே