மாற்றங்கள்

காலம் மாறிப் போச்சு
எங்க ஊரும் மாறிப் போச்சு
திண்ணை கட்டி வழிப் போக்கருக்கு
ஓய்வு தரும் வழக்கம் தொலைஞ்சு போச்சு
மாடு கன்னு வீட்டில் வளர்க்கும் வழக்கம் விட்டு போச்சு
அண்ணன் தம்பி கூட்டு குடும்ப வாழ்க்கை எல்லாம் போயே போச்சு
அப்பன் ஆத்தா சொந்தமெல்லாம் ஒரு அளவோடன்னு ஆகிப் போச்சு
அடி மனசு ஏக்கமெல்லாம் போயி அன்பை தேடும் நிலை அருகி போச்சு
பிள்ள குட்டி ஒண்ணு ரெண்டு போதுமுன்னு ஆகிப் போச்சு
பருவமெல்லாம் பொய்த்து போகும் வாழ்க்கை முறை வந்து போச்சு
வெவசாய பூமி எல்லாம் வீட்டு மனைகளாக மாறிப் போச்சு
எங்க சாதி மத பேதம் மட்டும் மாறாம இன்னும் வளர்ந்து போச்சு!

எழுதியவர் : கருணா (10-Oct-14, 4:49 pm)
Tanglish : maatrangal
பார்வை : 119

மேலே