என்ன செய்யப் போகிறாய்

கரும்பானது - உன் பேச்சு
எனக்கு என்றும்
இனிப்பானது!

உயர்வானது - உன் உறவு
எனக்கு அதுவே
உயிரானது!

மருந்தானது - உன் முகம்
சோகம் நீக்கும்
விருந்தானது!

சிறப்பானது -உன் மோகம்
தாகம் தீர்க்கும்
அமுதானது!

அதனால்..என்னுடன்..

நீ ..... ....பேசு!
உறவு......கொண்டாடு!
இன்முகம் காட்டு!
நல்ல முடிவு எடு!
காதல் கணை தொடு!

இல்லையேல் ....ஆளை விடு!

என்னை..
என்ன செய்யப் போகிறாய்?

எழுதியவர் : கருணா (11-Oct-14, 12:01 pm)
பார்வை : 214

மேலே