இயற்கையைப் போற்றுதும்

இயற்கையைப் போற்றுதும்

தேடிப் பார்த்தேன் உலகில்
தெரிந்து கொண்டேன் அழகை !
இயற்கை செய்தது அறிமுகம்
எனக்குக் கிடைத்தது அனுபவம் !

ஜாடை காட்டும் மதுமலர்
ஆடை ஆக்கும் இலைகளை
காட்சி சிறகைத் தரும்
கற்பனை பறந்து வரும் !

நடை பழகும் நதிமகள்
இடை நெலியும் புதுமைகள்
பார்த்து ரசித்த நானும்
படரும் கரைகள் ஆவேன் !

குடை பிடிக்கும் ஒருமரம்
பாய் விரிக்கும் புல்வெளி
படுத்து உறங்கும் போதும்
பஞ்சனை தோற்றுப் போகும் !

வண்ண ஓவியம் வரையும்
வானில் வில்லாய் நிறையும்
பறவைக் கூட்டம் அழகே
மயங்கி வியக்கும் உலகே !

வானைத் தொடும் மலைகள்
அதனைத் தழுவும் முகில்கள்
எனக்குக் கவிதை பாடும்
இன்பம் அதிலே தூவும் !

சின்னக் குழந்தை விரலாய்
கன்னம் வருடும் தென்றல்
என்னைக் கவிஞன் எனவே
எண்ண வரங்கள் தருமே !!

தேடிப் பார்த்தேன் உலகில்
தெரிந்து கொண்டேன் அழகை !
இயற்கை செய்தது அறிமுகம்
எனக்குக் கிடைத்தது அனுபவம் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (11-Oct-14, 6:53 pm)
பார்வை : 6735

மேலே