கனவும் கனவாகி விடும் நிலை

எங்கு நோக்கினும் பச்சை வண்ண
மரங்கள் அதில் வண்ண வண்ண
மலர்களும் கனிகளும் உள்ளம்
கொள்ளை கொள்ளும் வண்ணம்
உயர்ந்து நிற்கும் மலைகளும்
அதன்மேலிருந்து நிலமகளை
தழுவவிரைந்து வந்து விழும்
வெண்அருவியும் தரையில்
சலசலவென்ற ஓசையுடன்
தவழும் நீரில்துள்ளி ஓடும்
மீன்களும் கால் நனைக்கையி்ல்
காணாமல் மாயமாவதும் சற்று
நொடிக்குள் உறவுகளுடன் வந்து
பாதத்தை ருசிபார்த்து அலற
வைப்பதுவும் அடடா ஏதோ
அலறுகிறதே ஓ அலாரமா
ம் கண்டதெல்லாம் கனவிலா
மனிதனின் விழுப்புணர்வு மழுங்கி
கிடப்பதால் பார்த்து ரசித்து உணர
வேண்டியவைகள் இனி கனவிலாது
காணமுடியுமா என்ற கேள்வியே
கனவு காணக்கூட நேரமில்லாமல்
ஓடிக் கொண்டிருக்கும் மனித
வாழ்வில் இனி கனவும் கனவாகி
விடும் நிலையில் இருப்பது மெய்யே.......

எழுதியவர் : உ மா (12-Oct-14, 7:41 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 102

மேலே