இனிய பாரதம்
இனிய பாரதமே !
எங்கள் இந்திய தாயகமே !
(இனிய)
ஆண்டான் அடிமையும்
சமம் இங்கே...
முரண்கள் ஏதுமில்லை...!
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
எவருமில்லை ...
உள்ளங்கள் ஒன்றுபட்டால்..!
(இனிய)
வெள்ளையன் ஆண்ட நேரத்திலே ..
ஒன்றுபட்டு இருந்தோம் !
நம்மை நாமே ஆளுவதில்..
நட்புணர்வை மறந்தோம்..!
(இனிய)

