தூய்மையான பாரதம்
வாருங்கள் ! வாருங்கள் ! நண்பர்களே !
வளமான பாரதத்தை ..
வலுபடுத்துவோம் நண்பர்களே !
(வாருங்கள் )
குப்பை கூளம் அகற்றிடுவோம் !
குட்பை அதற்கு சொல்லிடுவோம் !
(குப்பை )
தனி மனித ஒழுக்கத்தினை ...
தவறாமல் கடைபிடிப்போம் !
(வாருங்கள் )
ஏழையாக நீ இருந்தும்
ஏற்றம் பெறலாம் வாழ்விலே !
சுத்தம் அதனை நீ தினமும்
நித்தம் பேணி கத்திட்டால் !
(வாருங்கள் )
இந்தியாவின் வளர்ச்சிக்கும் !
ஈன்றோர் மன குளிர்ச்சிக்கும் !
சுத்த சுகாதார பாதையிலே ...
சுகமாய் வாழ்வோம் தரணியிலே !
(வாருங்கள் )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
