தவிப்பு

குழலின் குழிகளில்
கபடம் ஆடும் காற்றின்
இசை கண்டேன்
உன் தொண்டை குழியில்....

பழுத்துத் தொங்கும் அரத்தி
போல சிவந்திருக்கும் உன் உதடுகள்
அதனை,
செவ்வென செதுக்கிய சிற்பி-அவனை
தேடுகிறேன்.....

பால்வண்ண அன்னத்தின்
கழுத்துதனை வளைத்து பிரம்மன்
செய்திட்ட இழை தான்-உன்
மெல்லிடையோ......

துள்ளி விளையாடும் புள்ளிமான்
போல நளினம் காட்டும் கால்கள்
என்னை சொக்கி இழுக்குதடி....

உன் மூச்சுக் காற்றால் மெருகேறிய காற்று
என் இதயத்தை நினைக்குதடி....
அதில் கொஞ்சம் மிச்சம் ஏன்? என
நெஞ்சம் ஏங்குதடி....

எழுதியவர் : (16-Oct-14, 8:50 pm)
Tanglish : thavippu
பார்வை : 86

மேலே