தேடுகிறேன்
குறு குறுக்கிறது
நெஞ்சம்..
குற்றம் செய்யாத போதே !
பட படக்கிறது..
இதயம் ..
தப்பு செய்யாத போதே!
துடி துடிக்கிறது
மனது ..
தவறு செய்யாத போதே!
கன கனக்கிறது..
உள்ளம்..
கவலை இல்லாத போதே!
காரணம்..
நேற்றிரவு பதினோரு மணி போலே
வந்ததொரு புதிய நண்பரின் மின்னஞ்சல்..
டவர் கட்டானதாலே உடன் நன்றி சொல்ல
முடியாததாலே ..தேடிப் பின் பார்க்கையிலே
அது எப்படியோ காணாமல் போனதாலே
திணறுகின்றேன்..காலை முதலே !
கவிதை ஒன்றிற்கு பாராட்டு தந்த
நண்பர் அவர்க்கு பதிலுக்கு நன்றி
சொல்ல முடியாமல் போனதாலே..
வருந்துகின்றேன் ..எனை மன்னிப்பீரே!