மீன் பிடிக்கலாம் வா
இணைய தளத்தில்
சமீபத்தில்..
கண்டதொரு செய்தி
ஏற்படுத்தியது நெகிழ்ச்சி..!
பள்ளி ஒன்றின் வெளியே
சிறுமியர் சிலர் தினமே
கண்டு வருவாராம் ஓர் பிச்சைக்காரனையே !
ஒரு ரூபாய் ஒவ்வொருவர்
போடுவாராம்..இது கொஞ்ச காலமே!
சிந்தித்து அவருள் ஆறு பேர் கூடிப் பேசி
ஆளுக்கு நூறு ரூபாய் அவரவர் தம் வீட்டில் பெற்று
அவனுக்கு வைத்து தந்தாராம் சிறிய மிட்டாய்க் கடை ஒன்று..
..
இப்போது அவன் ..
தெரு..அல்ல..அல்ல..
சிறு வியாபாரி..!
மீனை கொடுப்பதற்கு பதில்
மீன் பிடிக்கக் கற்றுக் கொடு..
என்று எங்கோ படித்ததும் நினைவுக்கு வர..
நெகிழ்ந்தது மனது..சிறுமியரின் செயலைக் கண்டு!

