கண்மணியே எந்தன் வெண்மதியே

இதயத்துள் விழுந்த முதல் பனியே
இறக்கை முளைத்த விழியே !
வழிமீது விழுந்த என்விழிகள்
விலகாத ஏவு கணைகள்
நீ விரித்த வலையோ ...!

உனக்காக விழிக்கிறேன்
உறங்காமல் தவிக்கிறேன்
திரும்பிய திசையெங்கும்
நீயின்றி விழி மங்கும்

நானாக நானில்லை
நீதானே என் வானிலை
அழுக்கான என்தேகம்
வெளுப்பான உன்மோகம்
உணவுண்ண நினைக்கிறேன்
உள்ளுக்குள் சுடுமென்று தவிர்க்கிறேன்

கால் கொலுசு சுரமொலிக்க
எனைமறந்து உன் நாமத்தை நானொலிக்க
உன்பெயரை யாரோ அழைக்க
ஓடிவந்து பார்த்திளைக்க...

உனக்காக ஏங்கினேன்
உள் மூச்சு வாங்கினேன்
நிலவொளியே வா வெளியே
நீயின்றி நிறக்கா வான்வெளியே !!

எழுதியவர் : கனகரத்தினம் (19-Oct-14, 3:10 am)
பார்வை : 67

மேலே