பைத்தியம் பிடிச்சிருச்சு - சந்தோஷ்

(-காதலனின் பிதற்றல. - )

உன் இதயச்சிறையில்
நான் அடைக்கப்படவே
நீ விழியால் ஆணையிட்டாய்
நான் வழியின்றி அவசரப்பட்டுவிட்டேன்.

ஜாமீன் இல்லை
ஆயுட்கால தண்டனை

உயிர் ஒன்று
உடல் இரண்டு-நீ
உண்டானால் மூன்று
என்றுதானே
நீ எனக்கும்
நான் உனக்கும்
காதல்சாட்சியாய் தீர்ப்பு எழுதினோம்.

இப்போது என்னாயிற்று அன்பே ?
திருத்தி எழுதமுடியா தீர்ப்பை
திருத்தி எழுதவைக்கிறாய்.
எதற்கென்றே தெரியாமல்
எதற்கோ என்னை
ஜாமீனில் வெளியேற்றுகிறாய்.

அன்று எழுதியது தீர்ப்பு
இன்று முடிவல்லவோ.
நீயும் அந்த நீதிபதியின்
புத்தியுள்ளவள் தானோ..?

எதற்கு என்னை சிறைவைத்தாய். ?
எதற்கு உன்னுள் என்னை
தீர்ப்பாய் எழுதினாய்?
எதற்கு உன்னிலிருந்து என்னை
பிணையத்தில் விடுவிக்கிறாய்.?

அது என்ன ?
யோசிக்கவேண்டுமென்று
மூன்று மாத அவகாசம்... ?

அடியே... நீயும்
இந்திய நீதிமன்றங்களை போலத்தானா..?
இப்படியுமா குழப்பவாதியா இருப்பாய்..?

தப்பா ? சரியா ?
காதலிக்கிறீயா இல்லையா ?
ஆமா வா இல்லையா ?
இரண்டுல ஒன்னு
உடனடியா சொல்லமாட்டீயா ?
என் தேவதையே..!


கடவுளே..!
சுப்ரமணிய சாமியே...!
என்னய்யா நடக்குது..........?

அய்யோ....!
இன்னும் ஏன் எனக்கு
பைத்தியம் பிடிக்கல.....!!

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (19-Oct-14, 10:21 am)
பார்வை : 238

மேலே