ஏனோ வார்த்தைகளில்லை என்னிடம்-வித்யா

ஏனோ வார்த்தைகளில்லை என்னிடம்-வித்யா

மழையை நான்
இறுகப்பிடித்துக்
கொண்டேனா

இல்லை மழை
என்னை இறுக
அனைத்துக் கொண்டதோ
நானறியேன்

என்னில் மழையோ
மழையில் நானோ
விடுவித்துக்கொள்ள
முயலா நொடிகளில்
குளிரின் பிடியில்
தவித்திருக்கும் போது
குறுகிப் படுத்திருக்கும்
பூனையின் கதகதப்பான
இதமாகவேப் பயணிக்கிறது
இப்பேதையின் சொல்லாக் காதல்.....!!

சாப்பிடாமல் தூங்கிய
ஓரிரவில் என் அம்மா
எழுப்பும்போது உளறலாய்
வந்தக் காதல் மொழிகள்

உன் வாசல் மழையில்
மௌனமாகவே நனைகிறது

மைஇருட்டுப்பார்வையின்போது
காதல் மழையின்
இடைவெளியில்
மீதம் இருந்த
வார்த்தைகளும்
தொலைத்து நிராயுதபாணியாக
நிற்கும் நான்
ஆயுதம் ஏந்தித்தாக்கும்
உன்னை எதிர்கொள்ள
ஏனோ வார்த்தைகளில்லை
என்னிடம்....!!


==========
நித்யாவிற்காக(மகிழினி) எழுதியது.......!

எழுதியவர் : வித்யா (20-Oct-14, 9:51 pm)
பார்வை : 216

மேலே