தமிழ்த்தாய்

நுரை பொங்கும் அலைகடலின் கரை மணலை சலித்துபார்தேன்
அலையில்லா நடுக்கடலின் மட்டம் சென்று தேடிப்பார்த்தேன்
மலை தோரும் பரந்திருக்கும் மரங்கொடிகளை கேட்டுப்பார்த்தேன்
சலித்துப்பார்ததோ வார்த்தைகளை
தேடிப்பார்த்ததோ அர்த்தங்களை
கேட்டுப்பார்ததோ இனிய குரலினை
இவை மூன்றும் ஓருருவாய் பெற்றிருப்பவள் எவள்
சுவை குன்றா மொழியுருவாய் வீற்றிருப்பவள் அவள்
இத்தனை பெருமையும் வாய்ந்தவள் தானவள்
முத்தமிழ் எனக்களித்த தமிழ்த்தாய் தானவள்