திருமந்திரம்

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே....திருமூலர்

சிவன் பிறப்பில்லாதவன்; பின்னிய சடையுடையவன்; பேரருளாளன்;இறப்பில்லாதவன்; யாவர்க்கும் இன்பம் அருளி அவர்களை துறக்காதிருப்பவன். அவனைத் தொழுங்கள். அப்படி தொழுதால் உங்களை என்றும் மறவாதிருப்பவன். மாயைக்கு எதிரான பேரறிவினன் அவன்.

எழுதியவர் : சுடரோன் (21-Oct-14, 5:44 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே