பட்டங்கள்
அவன் உயிரணுக்கள்
பாதிக்கபட்டிருந்தாலும் கூட-
அவளுக்கு மட்டும் தான் பட்டம்.....
மலடி என்று..!
அவன் சுகம் பெறவே
அவளையே தந்தாலும் கூட-
அவளுக்கு மட்டும் தான் பட்டம்...
வேசி என்று..!
வீட்டை விட்டு ஓடியதற்க்கு
அவனும் ஒரு காரணம் என்றாலும் கூட-
அவளுக்கு மட்டும் தான் பட்டம்...
ஓடுகாலி என்று..!
அவ்வளவு ஏன்..?
இறந்தது அவனாக இருந்தாலும் கூட-
அவளுக்கு மட்டும் தான் பட்டம்..
விதவை என்று..!