நீ தான்!!
நீதான் என்அன்பு என்றாள்
அந்த அன்பில்கரைந்து போனேன்
நீதான் என்உயிர் என்றாள்
அந்த வார்த்தையில் வாழ்வு பெற்றேன்
நீதான் என்உலகம் என்றாள்
அவளுடன் இருக்கும் போது
இந்த உலகத்தை மறந்தேன்
நீதான் என்இதயம் என்றாள்
என் இதயத்தை அவளுக்காகவே
துடிக்க வைத்தேன்
நீதான் என்கணவன் என்றாள்
பிறகுதான்
தெரிந்தது எல்லாம்
கண-நேரம் என்று...................!!